மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்… காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி, பெரியபோரதீவுப் பகுதியைச் சேர்ந்த மாணவன் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (19-04-2024) பெரியபோரதீவில் இருந்து களுவாஞ்சிக்குடிக்கு தனியார் வகுப்புக்கு சென்ற மாணவனே காணாமல்போன நிலையில் பட்டிருப்பு பாலத்திற்கு கீழான ஆற்றுப் பகுதியில் இருந்து நேற்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இரு தினங்களுக்கு முன் வீட்டில் இருந்து களுவாஞ்சிகுடிக்கு தனியார் வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவன் வீடு திரும்பாத நிலையில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார் நேற்று குறித்த மாணவனின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.