ஏழு உயிர்களை காவு கொண்ட கோர விபத்து! சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அதிர்ச்சி தகவல்
ஏழு உயிர்களை காவு கொண்ட தியத்தலாவை Fox Hill கார் பந்தயம் பாதுகாப்பான முறையில் நடத்தப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் தற்போது பகிரபட்டு வரும் செய்தியொன்று மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மீதமுள்ள ஓட்டப் பந்தயங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட Fox Hill கார் ஓட்டப் பந்தயம் 5 வருடங்களின் பின்னர் இந்த வருடம் நடத்தப்பட்டுள்ளது.
விபத்து
தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற கார் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
இதில் 8 வயது சிறுமியொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும் 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.