இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர பிரான்ஸ் லெபனான் தலைவர்கள் ஆலோசனை
இஸ்ரேல் ஹமாஸ் மோதலாகத் துவங்கிய பிரச்சினை, திசைமாறி, இன்று ஈரான் இஸ்ரேல் மோதலாக உருவெடுத்துள்ளது. பிரச்சினை பெரிதாகுமானால், அது மூன்றாம் உலகப்போராகக் கூட மாறலாம் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர பிரான்ஸ் லெபனான் தலைவர்கள் ஆலோசனை
இந்நிலையில், இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக, லெபனான் பிரதமரான Najib Mikatiயும், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானும், லெபனான் ராணுவத் தலைவரான Joseph Aounம் பாரீஸில் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார்கள்.
இது தொடர்பாக லெபனான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்களை நிறுத்துவது தொடர்பில் தான் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக லெபனான் பிரதமரான Najib Mikati தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்களை நிறுத்துவது தொடர்பில் மேக்ரான் எடுத்துவரும் முயற்சிகளுக்காகவும், லெபனான் ராணுவத்துக்கு அவர் அளித்துவரும் ஆதரவுக்காகவும் Mikati அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
ஈரானுடைய ஆதரவைப் பெற்ற, லெபனானை மையமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பு, பல ஆண்டுகளாகவே இஸ்ரேலுடன் மோதல் போக்கைக் கையாண்டுவருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் மோதல்களுக்குப் பிறகு அது மேலும் மோசமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.