தியத்தலாவை கோர விபத்து : கவலை வெளியிட்ட இலங்கை இராணுவம்
தியத்தலாவை பொக்ஸ் ஹில் (fox hill 2024) பந்தய மைதானத்தில் இடம்பெற்ற விபத்து குறித்து ராணுவ ஊடகப் பிரிவு கவலை தெரிவித்துள்ளது
குறித்த விபத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு இராணுவத் தலைமையகம் தனது ஆழ்ந்த மனவேதனையை தெரிவித்துள்ளது
இராணுவத்தின் ஊடகப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்
மேலும் இந்த விபத்து தொடர்பில் தற்போது வரையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.