;
Athirady Tamil News

ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்

0

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் (presidential election) முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) வேட்பாளராக முன்வைக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த தகவலை தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ருஷான் மலிந்த வெளியிட்டுள்ளார்.

பலபிட்டியவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான அமைச்சர்கள்
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

பொதுத் தேர்தலுக்கு இருபத்தி இரண்டு மாவட்டங்களில் தனது கட்சி வேட்பாளர்களை முன்னிறுத்தவுள்ளதாக ருஷான் மலிந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊழலுக்கு எதிரான அமைச்சர்கள் பலர் தமது கட்சியைச் சுற்றி திரளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.