பாடசாலை விடுமுறை: சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்
2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (24) ஆரம்பமாகவுள்ளதோடு மே 06 ஆம் திகதி முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளை, 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை மே மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, 2023/2024 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சைச் சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பரீட்சை அனுமதி அட்டை
அதன்படி, விண்ணப்பதாரர்கள் பரீட்சை அனுமதி அட்டைகளை பாடசாலை அதிபர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
அத்துடன், தனியார் விண்ணப்பதாரர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டைகளை தபால் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாதாரண தர பரீட்சை வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகி 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, இந்த வருடம் நான்கு இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து எழுபது பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.