கிளிநொச்சியில் கடலுணவு கொள்வனவு தொழிற்சாலைகளில் திடீர் பரிசோதனை
கிளிநொச்சி(Kilinochchi) பூநகரி பள்ளிக்குடாப் பகுதியில் கடலுணவு கொள்வனவு மற்றும் பதப்படுத்தலில் ஈடுபடும் தொழிற்சாலைகள் திடீர் பிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் இயங்கிவரும் ஆறு தொழிற்சாலைகளை மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினர் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் சுகாதாரக் கண்காணிப்புப் பரிசோனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
உணவு பாதுகாப்பு முறைகள்
பூநகரி பள்ளிக்குடாப் பகுதியில் அதிகளவான கடலுணவு கொள்வனவு மற்றும் பதப்படுத்தல் மேற்கொள்ளும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இவை சரியன வகையில் உணவுப் பாதுகாப்பு முறைகள், தொழிலாளர் பாதுகாப்பு, சுற்றாடல் சுகாதாரம் என்பவற்றைக் கடைப்பிடித்து இயங்குகின்றனவா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது பயன்படுத்தப்ட்ட கழிவு நீர் உரிய வகையில் பரிசோதிக்கப்பட்டே கடலுக்குள் விட வேண்டுமெனவும், உணவு பதனிடும் போது தொற்றுக்கள் ஏற்படுவதைத் தடுக்கும் முறைகள் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.