;
Athirady Tamil News

மலேசிய கடற்படை ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி கோர விபத்து: 10 பேர் பலி

0

மலேசியாவில்-லுமுட்டில் உள்ள ராயல் மலேசியன் நேவி (ஆர்எம்என்) தளத்தில் இன்று காலை இரண்டு மலேசிய ஆயுதப்படை ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதியதில் 10 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை ஆர்எம்என் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.

“நேற்று காலை 9.32 மணியளவில் RMN லுமுட் தளத்தில் 90வது கடற்படை தின அணிவகுப்பு ஒத்திகையின் போது RMN கடல்சார் செயல்பாட்டு ஹெலிகாப்டர் (HOM-AW139) மற்றும் ஒரு Fennec ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்பதை RMN உறுதிப்படுத்துகிறது” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோர விபத்து
“இந்த சம்பவத்தில் 7 RMN HOM குழு உறுப்பினர்கள் மற்றும் 3 RMN Fennec குழு உறுப்பினர்கள் அடங்கிய மொத்தம் 10 பணியாளர்கள் இருந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டு, அடையாளம் காணும் செயல்முறைகளுக்காக Lumut RMN அடிப்படை இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதனையடுத்துஹெலிகாப்டர்களில் ஒன்று, ஏழு பேருடன் ஓடு பாதையில் மோதியதாக நம்பப்படுகிறது. மற்றையது, பாதிக்கப்பட்ட மற்ற மூன்று பேருடன் அருகிலுள்ள நீச்சல் குளத்தில் மோதி விபத்துக்குள்ளதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.