பாலியல் அத்துமீறல் விவகாரம்: இந்திய உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான 14 வயது சிறுமியின் கருவை கலைக்க இந்திய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மகாராஸ்டிராவில் அத்துமீறலுக்கு ஆளான 14 வயது சிறுமி ஒருவருக்கே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் கருவை கலைக்க வேண்டி சிறுமியின் குடும்பத்தினர் மும்பை மேல் நீதிமன்றத்தை வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
நீதிமன்றில் மேல்முறையீடு
எனினும் வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம், கரு 30 வார காலத்தை கடந்து விட்டது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததை குறிப்பிட்டு கருவை கலைக்க அனுமதி மறுத்திருந்தனர்.
இதனால் சிறுமியின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றில் தலைமை குறித்த நீதியரசர் டி.ஒய்.சந்திரசூட், தலைமையிலான அமர்வு, கருவை கலைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்து கருவை கலைக்க முடியுமா, அவ்வாறு செய்தால் சிறுமிக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை குறித்த அறிக்கை அளிக்க வேண்டுமென மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்ததையடுத்து¸ இந்நாட்டின் சியோன் மருத்துவமனையின் பரிந்துரையின்படி உயர்நீதிமன்றம் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது.