பிரித்தானிய பாடசாலையொன்றில் பதற்றம் : கத்திகுத்து தாக்குதலில் ஆசிரியர்கள் ,மாணவர் படுகாயம்
பிரித்தானியாவின் வேல்ஸ் பாடசாலையில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவமானது வேல்ஸில் உள்ள யுஸ்கோல் டைஃப்ரின் அமான் பாடசாலையில்(Ysgol Dyffryn Aman School)நேற்று(24) சுமார் 11:20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இரு ஆசிரியர்களும் ஒரு மாணவரும் கத்திக்குத்து காயங்களுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பல மணி நேரம் முடக்கப்பட்ட பாடசாலை
தாக்குதல் நடத்திய மாணவி கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பாடசாலையில் அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக பல மணி நேரம் முடக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் இறுதியாக மாலை 3:20 மணி அளவில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை அழைத்துச் செல்ல நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் கவலையுடன் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
There were the emotional scenes outside Ysgol Dyffryn Aman as pupils were released from lockdown after reports of a stabbing
Follow live updates: https://t.co/Oj4M2SYSVg pic.twitter.com/n3bBFT3NGA
— BBC Wales News (@BBCWalesNews) April 24, 2024