;
Athirady Tamil News

மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் தனியாருக்கு

0

மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதன்படி, இந்த விமான நிலையத்தின் நிர்வாகம் இந்தியாவின் ஷௌரியா ஏரோநாட்டிக்ஸ் பிரைவட் லிமிடட் (Shaurya Aeronautics Pvt. Ltd) நிறுவனத்திடமும் ரஷ்யாவின் ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜன்ஸ் மெனேஜ்மன்ட் (Airports of Regions Management Company) நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்படவுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரி 09ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மத்தளை விமான நிலையத்தை வாங்குவதற்காக, விருப்பம் தெரிவிப்பு கடிதங்களை அனுப்ப நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அமைச்சரவை தீர்மானம்
அதனையடுத்து, 5 நிறுவனங்கள் மத்தளை விமான நிலையத்தை வாங்குவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

அதற்கமைய, மேற்குறிப்பிட்ட இரு நிறுவனங்களுக்கு விமான நிலையத்தின் நிர்வாகத்தை கையளிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.