ஈராக்கில் பிரபல ரிக் ரொக் சமுக ஆர்வலரான பெண் சுட்டுக்கொலை
ஈராக் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்திய ஓம் ஃபஹத் பாக்தாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தலைநகரின் கிழக்கு Zayne பகுதியில் வெள்ளிக்கிழமை இந்தத் தாக்குதல் நடந்தது.
காரில் சென்று கொண்டிருந்தபோது
ஈராக் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “சமூக வலைதளங்களில் அறியப்பட்ட பெண்” “இனந்தெரியாதவர்களால்” கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது. அவரது மரணத்தின் சூழ்நிலையை விசாரிக்க “சிறப்பு குழு” அமைக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறியது.
குஃப்ரான் சவாடி என்ற இயற்பெயர் கொண்ட ஃபஹத், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருரவால் அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
உணவு விநியோகம் செய்வது போல்
ஈராக் பாதுகாப்பு வட்டாரம் AFP செய்தி நிறுவனத்திடம், தாக்குதல் நடத்தியவர் உணவு விநியோகம் செய்வது போல் நடித்ததாகத் தெரிகிறது எனத் தெரிவித்தது.
இதற்கிடையில், இந்த தாக்குதலில் மற்றொரு பெண் காயமடைந்ததாக அமெரிக்காவிற்கு சொந்தமான அல் ஹுரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.