இந்தியா வரும் பிரித்தானிய கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்., பொறுப்பேற்ற ஹவுதிகள்
இந்தியா வந்து கொண்டிருந்த கப்பல் ஒன்று செங்கடலில் ஏவுகணை மூலம் சனிக்கிழமை தாக்கப்பட்டது. இதற்கு ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
அந்த கப்பலின் பெயர் ஆண்ட்ரோமெடா ஸ்டார் (Andromeda Star) என்று கூறப்படுகிறது. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்தியா வந்து கொண்டிருந்து.
இந்த தாக்குதலில் கப்பலுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக கப்பலின் மாஸ்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையின்படி, இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 5.49 மணியளவில் நிகழ்ந்தது.
இந்தக் கப்பல் பிரித்தானியாவிற்கு சொந்தமானது, அதில் ஆன்டிகுவா மற்றும் பார்படாஸ் கொடி ஏற்றப்பட்டது.
தாக்குதலுக்கு மத்தியிலும் கப்பல் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. ரஷ்யாவில் உள்ள ப்ரிமோர்ஸ்கில் இருந்து பயணத்தைத் தொடங்கிய அது குஜராத்தில் உள்ள வாடினாரை அடையவிருந்தது.
இந்த கப்பல் இரண்டு முறை பல ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், முதல் தாக்குதலில் ஏவப்பட்ட ஏவுகணைகள் கப்பலின் மீது படாமல் அதன் அருகே கடலில் விழுந்தன. இரண்டாவது தாக்குதலில் கப்பல் சேதமடைந்ததாக்க கூறப்படுகிறது.
நேற்று (வெள்ளிக்கிழமை) ஹூதிகள் இந்தியாவுக்கு வரும் கப்பல் மட்டுமல்லாது, அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ட்ரோனையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏமனின் சாடா மாகாணத்தில் ஹவுதிகள் ஆளில்லா விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இதேபோல் சில நாட்களுக்கு முன்னதாக, இஸ்ரேலுடனான பதற்றத்திற்கு மத்தியில், ஹார்முஸ் கணவாயில் இருந்து இந்தியா வந்த கப்பலை ஈரான் கைப்பற்றியது. அவர்கள் அனுமதியின்றி கடல் எல்லைக்குள் நுழைந்ததாக ஈரான் கூறியது.
கப்பலின் பணியாளர்களில் 17 இந்தியர்கள் மற்றும் 2 பாகிஸ்தானியர்களும் அடங்குவர்.
பின்னர் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஈரான் பாகிஸ்தான் குடிமக்கள் இருவரையும், இந்தியாவைச் சேர்ந்த பெண் பணியாளர் ஒருவரையும் விடுவித்தது. மீதமுள்ள 16 இந்தியர்கள் இன்னும் ஈரானில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.