;
Athirady Tamil News

முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஓராண்டில் மட்டும் 65,000 பணியாளர்கள் பணி நீக்கம்… அதிர்ச்சி ரிப்போர்ட்

0

இந்தியாவின் மூன்று முக்கிய மென்பொருள் நிறுவனங்களில் ஓராண்டில் மட்டும் சுமார் 65 ஆயிரம் பணியாளர்கள் குறைந்துள்ளனர்.

உலக நாடுகளுக்கு தொழில்நுட்ப சேவை வழங்குவதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. சுமார் 21 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மென்பொருள் வர்த்தகம் நிலவும் நிலையில் TCS எனப்படும் Tata Consultancy Services, Infosys and Wipro ஆகியவை முன்னணி நிறுவனங்களாக உள்ளன. இந்த 3 நிறுவனங்களிலும் சுமார் 11 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மூன்று நிறுவனங்களில் மட்டும் கடந்த 2023-24 ஆம் நிதி ஆண்டில் மட்டும் சுமார் 65 ஆயிரம் ஊழியர்கள் குறைந்துள்ளனர்.

இதில் விப்ரோவில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மட்டும் 24,516 பேர் குறைந்துள்ள நிலையில், தற்போது 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இதேபோல இன்போசிஸ் நிறுவனத்தில் ஓர் ஆண்டில் 25 ஆயிரத்து 994 பேரும் டிசிஎஸ் நிறுவனத்தில் 13 ஆயிரத்து 249 பேரும் குறைந்துள்ளனர்.

உலக அளவிலான பொருளாதாரத்தில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை மற்றும் ரஷ்யா உக்ரைன், காசா இஸ்ரேல் போர்களால் மென்பொருள் மீதான செலவினங்களை நிறுவனங்கள் குறைத்து வருவதால், இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்கும் ஆர்டர்கள் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், இந்திய மென்பொருள் நிறுவனங்கள் தாங்கள் ஏற்கனவே பணிக்கு எடுத்து இதுவரை எவ்வித பணியும் வழங்காமல் Benchல் வைக்கப்பட்டிருந்தவர்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இவை தவிர, நிறுவனங்கள் Artificial Intelligence எனப்படும், செயற்கை நுண்ணறிவுக்கு மாறுவதும் பணியாளர்கள் குறைவதற்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.