சொகுசு வாகனங்களை பராமரிக்க முடியாமல் தவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல்களால் சொகுசு வாகனங்களைப் பராமரிக்க முடியாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏறக்குறைய நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பயணங்களுக்கு குறைந்த விலையில் உள்ள சிறிய வாகனங்களை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எரிபொருள் விலை அதிகம் என்பதால் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகின்றது.
வாகனங்களை விற்க ஏற்பாடு
மேலும், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேருந்துகள் மற்றும் தொடருந்துகள் உட்பட பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் மற்றொரு குழுவும் தங்களுடைய அதிக மதிப்புள்ள வாகனங்களை விற்க ஏற்பாடு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.