;
Athirady Tamil News

இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்குமா ஹமாஸ்..!

0

இஸ்ரேலின் சமீபத்திய போர்நிறுத்த முன்மொழிவை பெற்றதாகவும் அதற்கு பதிலைச் சமர்ப்பிப்பதற்கு முன் அதை ஆய்வு செய்து வருவதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

பலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் ஆறு மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.இந்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

தரைவழித் தாக்குதல்
காசாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தரைவழித் தாக்குதல் நடத்தியது போல் தற்போது தெற்கில் உள்ள ரபா நகரில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

காசா மீதான தாக்குதலால் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இருந்து மக்கள் பெரும்பாலானோர் ரபா எல்லையில் தஞ்சமடைந்துள்ளனர்.

அங்கு தரைவழி தாக்குதல் நடத்துவது மிகப்பெரிய அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்துமென அமெரிக்கா மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துள்ளன.

ஆனால் ரபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில் ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இஸ்ரேலின் நிபந்தனை
பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாசுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று இஸ்ரேல் தெரிவித்து போர் நிறுத்த முன்மொழிவை அளித்துள்ளது.

இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் தரப்பு தெரிவிக்கையில், இஸ்ரேலின் சமீபத்திய போர்நிறுத்த முன்மொழிவை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்தோடு அதற்கு பதிலைச் சமர்ப்பிப்பதற்கு முன் அதை ஆய்வு செய்து வருவதுடன் இஸ்ரேலின் நிபந்தனையை ஹமாஸ் அமைப்பு ஏற்குமா என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்தின் போது நூற்றிற்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.