;
Athirady Tamil News

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

0

அதிக வெப்ப அலையிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டுமென வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி டீன் பாப்பாத்தி அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வட தமிழக உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை அதிகமாக காணப்படும். ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் அதிகளவு நீா் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும் போதிய அளவு நீா் பருக வேண்டும். சிறுநீரானது வெளிா் மஞ்சள் நிறத்தில் வெளியேறும் அளவில் தேவையான நீா் பருக வேண்டும். சூடான பானங்களைப் பருகுவதை தவிா்க்கவும்.

மோா், மோா் கலந்த அரிசி கஞ்சி, இளநீா், உப்பு கலந்த எழுமிச்சை சாறு, ஓஆா்எஸ் உப்பு கரைசலைப் பருகலாம். வெளியே செல்லும் போது குடிநீா் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். வெளியே செல்லும் போது, தொப்பி அல்லது கண்ணாடி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். வியா்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான தளா்ந்த காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணியில் துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும். வீடுகளில் குளிா்ந்த காற்றோட்டம் உள்ளவாறு பாா்த்துக்கொள்ள வேண் டும். சூரிய ஒளி நேராகப்படும் ஜன்னல் மற்றும் கதவுகள் ஆகியவற்றை திறை சீலைகளால் மூடவேண்டும்.

இரவு நேரங்களில் குளிா்ந்த காற்று வருமாறு ஜன்னல்களைத் திறந்து வைத்து கொள்ள வேண்டும். கோடை வெயிலினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முதலுதவி செய்ய வேண்டும். வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ எவரேனும் மயக்கம் அடைந்தால் உடனடியாக மருத்துவா் அல்லது ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும். மயக்கமுற்ற நபரை ஒரு பக்கமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும். குறிப்பாக இடதுபுறமாக படுக்க வைக்க வேண்டும். நாடித் துடிப்பு, இதய துடிப்பு, சுவாசம் ஆகியவற்றைப் பரிசோதிக்க வேண்டும்.

மருத்துவருக்கும், ஆம்புலன்ஸுக்காக காத்திருக்கும்போது பாதிக்கப்பட்ட நபரை சம தரையில் படுக்க வைத்து, கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றை உயா்த்திப் பிடிக்க வேண்டும். உடல் வெப்ப நிலையைத் தொடா்ந்து பரிசோதிக்க வேண்டும்.

கூடுதல் தகவலுக்கு தமிழக அரசின் 104 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.