;
Athirady Tamil News

முதலைகள் ஜாக்கிரதை: புலம்பெயர்வோருக்கு எச்சரிக்கை விடுத்த ஆளுநர்

0

நதியைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோருக்கு ஆளுநர் ஒருவர் எச்சரிக்கைச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நதியைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோர்
மெக்சிகோ நாட்டிலிருந்து எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்த அமெரிக்க அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில், Rio Grande நதியைக் கடந்து மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்ந்தோரை அச்சுறுத்தும் வகையில், டெக்சாஸ் மாகாண ஆளுநர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

முதலைகள் ஜாக்கிரதை
டெக்சாஸ் மாகாண ஆளுநரான கிரெக் அபாட் (Greg Abott), சமூக ஊடகமான எக்ஸில், Rio Grande நதியைக் கடந்து மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்ந்தோருக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், Rio Grande நதியில் முதலைகள் உள்ளன. சில இடங்களில் அது குறித்து எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆகவே, உங்கள் சொந்த ரிஸ்கில் வேண்டுமானால் நதியைக் கடக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார் கிரெக். அத்துடன், நதிக்கரையில் முதலை ஒன்று காத்திருப்பதைக் காட்டும் வீடியோ ஒன்றையும் தன் செய்தியுடன் இணைத்துள்ளார் அவர்.

விடயம் என்னவென்றால், கிரெக்கின் எச்சரிக்கைக்கு அமெரிக்கர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இன்னும் நிறைய முதலைகளைக் கொண்டு அந்த ஆற்றில் விடுங்கள், அப்போதுதான் சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முடியும் என்னும் ரீதியில் சிலர் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.