முல்லைத்தீவில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்
முல்லைத்தீவு, ஜயங்கன்குளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்தள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (29.04.2024) இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை ஐயன்குளம் பிரதேசத்தில் கடும் மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மரத்தின் கீழே நின்றிருந்தவர்கள் மீதே மின்னல் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை
சம்பவத்தில் ஜயங்கன்குளம் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளியான மூன்று பிள்ளைகளின் தந்தையான காளிமுத்து சண்முகராஜா (49) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன், ஜயங்கன்குளம் புத்துவெட்டுவான் பகுதியை சேர்ந்த மகேந்திரன் பிரபாகரன் (26) என்ற இளைஞர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் படுகாயமடைந்தவர் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில். உயிரிழந்தவரின் சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஜயங்கன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.