நயினாதீவில் பேருந்து சேவை இன்றி மக்கள் தவிப்பு
நயினாதீவில் சேவையில் ஈடுபட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பழுதடைந்துள்ளமையால் , பேருந்து சேவைகள் இன்றி பலரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
நயினாதீவில் ஒரு ஒரே பேருந்து , தீவினுள் போக்குவரத்து சேவையில் இதுவரை காலமும் ஈடுபட்டு வந்தது. நயினாதீவிற்கு வேலைக்கு செல்வோர் , சுற்றுலா செல்வோர் ஊரவர்கள் என பலரும் தீவினுள் தமது போக்குவரத்திற்கு பேருந்து சேவையையே பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் சேவையில் ஈடுபட்டு வந்த பேருந்து பழுதடைந்துள்ளமையால் , பேருந்து சேவை இன்றி பலரும் கால் நடையாகவே தமது பயணத்தை தொடர வேண்டிய நிலைமை காணப்படுகிறது.
எனவே விரைந்து பேருந்து சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.