லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 5 போ் உயிரிழந்தனா்.
புன்னச்சேரி அருகே நேற்றிரவு இந்த கோர விபத்து நடந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
அதில் காரை ஓட்டிச்சென்ற காசர்கோடு காலிச்சநடுக்கம் சாஸ்தம்பாறையைச் சேர்ந்த கே.என்.பத்மகுமார் (59), பீமநதியைச் சேர்ந்த சூரிக்காட் சுதாகரன் (52), சுதாகரன் மனைவி அஜிதா(35), அவரது தந்தை கொழுமாள் கிருஷ்ணன் (65) 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
அஜிதாவின் தம்பி அஜித்தின் மகன் ஆகாஷ் (9) என்ற சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், காரின் பின்னால் வந்த லாரி காரின் மீது அதிவேகத்தில் மோதி விபத்தி ஏற்படுத்தியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த விபத்து தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.