நள்ளிரவு முதல் எரிவாயு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கான விலைகள் நாளை(03) அறிவிக்கப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவத்துள்ளார்.
குறைக்கப்பட்ட விலை
அதன்படி குறைக்கப்பட்ட விலை நாளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, கடந்த 30 ஆம் திகதி முதல் நாட்டில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.