அடையாள அட்டை இன்றி வாக்களிக்கச் சென்ற பொறிஸ் ஜோன்சனுக்கு ஏற்பட்ட நிலை
பிரிட்டனில் உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக உள்ளூர் வாக்குச்சாவடிக்கு வந்த பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்(Boris Johnson), ஏற்றுக்கொள்ளக்கூடிய புகைப்பட அடையாள அட்டையை கொண்டு வர மறந்ததால், அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாக்களிக்க தனது உள்ளூர் வாக்குச் சாவடிக்குச் சென்றபொறிஸ் ஜோன்சன் இந்தச் சம்பவத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.
மீண்டும் வந்த பொறிஸ் ஜோன்சன்
அங்கிருந்து சென்ற பொறிஸ் ஜோன்சன், பின்னர் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடையாள அட்டையை கொண்டு வந்து வாக்களித்தார்.
அவரது அரசாங்கமே கொண்டு வந்த சட்டம்
அவரது அரசாங்கமே 2022 இல் வாக்களிக்க அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என்ற சட்டத்தை இயற்றியது குறிப்பிடத்தக்கது.