தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்: தந்திரமாக காய் நகர்த்தும் புடின்
ரஷ்யா (Russia), உக்ரைன் அதிபர் விளோடிமீர் ஜெலன்ஸ்கிக்கு(Volodymyr Zelenskyy) எதிராக வழக்கு பதிவு செய்து, அவரை தேடப்படுவோர் பட்டியலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரஷ்யாவின் உள்துறை அமைச்சரின் தகவலின் படி ரஷ்யாவின் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யா பிடியாணை
கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ரஷ்ய – உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து உக்ரைன்(Ukraine) மக்கள் உட்பட பல ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கும் எதிராக ரஷ்யா பிடியாணை பிறப்பித்துள்ளது.
அத்தோடு, கடந்த ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் மீதும் ரஷ்யா பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் உக்ரைன் அதனை முற்றாக நிராகரித்துள்ளது.
சர்வாதிகாரி புடின்
இந்நிலையில், உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்ய சர்வாதிகாரி விளாடிமிர் புடினுக்கு(Vladimir Putin) எதிராக போர் குற்றங்களை புரிந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்வதற்காக சர்வதேச குற்றவியல் நீதமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த பிடியாணை சுமார் 123 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.