வடக்கின் தொழில் முயற்சியாளர் ஊக்குவிக்கத் தயார் – டேவிட் பீரிஸ் குழுமம் தெரிவிப்பு
வடக்கின் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு, டேவிட் பீரிஸ் குழுமத்தின் துணை நிறுவனமான டிபி இன்ஃபோடெக் (DP Info tech) நிறுவனம் தயாராக இருப்பதாக டேவிட் பீரிஸ் குழுமத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரோஹன திசாநாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இல 61. பலாலி வீதி எனும் முகவரியில் உள்ள DPMC பிராந்திய அலுவலக வளாகத்த்தில் டிபி இன்ஃபோடெக்கை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
புதுமை மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் ஆற்றல்வாய்ந்த பணிச் சூழலை உருவாக்குவது எமது நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையிலான DPIN இன் மாற்றத்தை இந்த நிலையம் பிரதிபலிக்கின்றது.
இவ் புதிய அபிவிருத்தி நிலையத்தை நாம் திறந்துவைத்திருப்பதுடன், படைப்பாற்றல் மற்றும் ஒத்துழைப்பை வழங்கும் இடமாக அமையும் .
புதிய தயாரிப்புக்களை உருவாக்கவும், அதன் செயற்பாடுகளில் செழித்தோங்குவதற்கும் எமது பணியாளர்களுக்கு சுதந்திரம் இருக்கும் என்றும் நாம் நம்புகின்றோம்.
வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இது அமைந்துள்ள நிலையில் முற்போக்கான நாட்டை உருவாக்கவும், வளர்ப்பதற்கும் உதவும் வகையில் உள்ளூர் சமூகங்களின் உண்மையான திறனை அடைவதற்கு வாய்ப்புகளை உருவாக்கி அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் யாழ் பல்கலைக்கழகத்தையும் இணைத்து முன்னோக்கி செல்வோம் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்.