கட்டுநாயக்க விமான நிலையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞன்: பொது பாதுகாப்பு அமைச்சர் நடவடிக்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒன்லைன் விசாவை இந்திய அதிகாரிகள் வழங்கியமைால் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் இலங்கை இளைஞன் கடும் கோபமாக பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்தது.
இந்நிலையில், விசா வழங்கும் பிரிவில் குழப்பத்தை ஏற்படுத்திய இளைஞனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸாரிடம் வாக்குமூலம்
கடந்த மே மாதம் முதலாம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேவையற்ற விதத்தில் நடந்து கொண்ட இளைஞயை விமான நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சட்டத்தரணியான சந்தருவன் குமாரசிங்க என்ற இளைஞன் இன்று காலை விமான நிலைய காவல்துறையிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அவர் விமான நிலைய காவல்துறைக்கு வந்தபோது, வேறு சில வழக்கறிஞர்களும் அங்கு வருகை செய்துள்ளனர்.
இதேவேளை, விமான நிலையத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை பதிவு செய்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மூவரின் வாக்குமூலங்களை கட்டுநாயக்க பொலிஸார் நேற்று (05) மாலை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.