தந்தையை சந்திக்க இளவரசர் ஹரிக்கு ராணி கமீலா விதித்துள்ள கட்டுப்பாடு
பிரித்தானிய இளவரசர் ஹரி இன்று பிரித்தானியா வரும் நிலையில், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஹரி தன் தந்தையை சந்திக்க, ராணி கமீலா கட்டுப்பாடு விதித்துள்ளதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா வரும் ஹரி
போரில் காயமடைந்த மற்றும் உறுப்புகளை இழந்த ராணுவ வீரர்களுக்காக, இளவரசர் ஹரி துவங்கிய இன்விக்டஸ் விளையாட்டுப்போட்டிகளின் பத்தாம் ஆண்டு விழா, இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. லண்டனிலுள்ள புனித பால் தேவாலயத்தில் அது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நாளை, அதாவது, மே மாதம் 8ஆம் திகதி பிரித்தானியா வருகிறார் ஹரி.
தந்தையை சந்திக்க ஹரிக்கு ராணி கமீலா கட்டுப்பாடு
நாளை பிரித்தானியா வரும் ஹரி, மன்னரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ராணி கமீலா தனது கணவரான மன்னர் சார்லசின் உடல் நலனை கவனித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர் மன்னரை ஹரி தனியாக சந்திக்க விடமாட்டார் என ராஜ குடும்ப நிபுணரான Angela Levin தெரிவித்துள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு பலவீனமான நிலையில் மன்னர் இருக்கிறார். ஹரியையோ நம்பமுடியாது. மன்னரை அவர் தனியாக சந்தித்தால், மன்னர் தனது உடல் நலம் குறித்து ஹரியிடம் வெளிப்படையாகக் கூறிவிட வாய்ப்புள்ளது. ஹரியோ என்ன நடந்தாலும் உடனே அதை ஊடகங்களுக்குக் கூறிவிடுவார்.
ஆகவே, ஹரி, மன்னரை தனியாக சந்திக்க, ராணி கமீலா அனுமதிக்கமாட்டார் என்று கூறியுள்ளார் Angela Levin.