சாதாரண தர பரீட்சை முடிவடைந்ததும் .. கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
தற்போது நடைபெற்றுவரும் சாதாரணதர பரீட்சை நிறைவடைந்த இரண்டு வாரங்களுக்குள் அந்த மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) தெரிவித்தார்.
கொரோன காலத்தில் ஏற்பட்ட கல்விச் செயற்பாடுகளின் பின்னடைவை சீர்செய்யும் முகமாக இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சாதாரணதர பரீட்சை முடிந்ததும்
இதேவேளை சாதாரணதர பரீட்சை முடிந்ததும் விடைத்தாள் மதிப்பீட்டு செயல்முறை 02 நிலைகளின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amit Jayasundara) தெரிவித்துள்ளார்.
அதற்காக 35000 ஆசரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.
எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்ள
பரீட்சை காலத்தில் எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்ள அனைத்து திணைக்களங்களும் தயார் நிலையில் இருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.