;
Athirady Tamil News

பூமியை நோக்கிவரும் நான்கு பெரிய சிறுகோள்கள்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

0

பூமியை நோக்கி தற்போது நான்கு சிறுகோள்கள் வருவதாக நாசா(Nasa) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனடிப்படையில் நாசா தொடர்ந்தும் ஆராய்ச்சி செய்து வருகின்ற நிலையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், ”குறித்த கோள்களில் ”Asteroid 2024 JF” என்ற கோளானது சிறியதாகவும் 26 அடி அளவை கொண்டுள்ளது.

பெரிய கோள்
இது மணிக்கு 42,081 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதுடன் இதன் பூமிக்கு மிக நெருக்கமான அணுகுமுறை மே 06 அன்று 21:58 UTC மணிக்கு(ஒருங்கிணைந்த யுனிவர்சல் நேரம்) நிகழும்.

இரண்டாவது பெரிய கோளாக 2024 HE2 பெயரிடப்பட்டுள்ளதுடன் இது 78 அடி உயரத்தில் சற்றுப் பெரிய சிறுகோளாக காணப்படுகிறது.

மணிக்கு 43,472 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என கூறப்படுவதுடன் இது மே ஆறு அன்று 20:16 UTCக்கு கடந்து செல்லும்.

அணுகுமுறை
மேலும், பூமியில் இருந்து இதன் தூரம் 1.2 மில்லியன் கிலோமீட்டர் ஆகும் அத்தோடு மூன்றாவதாக ஆஸ்டிராய்டு 2024 HL2 என்ற கோள் பெயரிடப்பட்டுள்ளது.

84 அடி அளவு கொண்ட இந்த கோள் மணிக்கு 48,247 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதுடன் பூமிக்கு மிக நெருக்கமான அணுகுமுறை மே 6 அன்று 08:12 UTCக்கு இருக்கும்.

இது பூமியில் இருந்து 2.9 மில்லியன் கிலோமீட்டர்களுக்குள் கடந்து செல்வதுடன் இறுதியாக அஸ்டெராய்டு 2024 HM2 என்பது இறுதியாக வரும் சிறுகோள் ஆகும்.

சிறுகோள்களின் அளவுகள்
171 அடி விட்டம் மற்றும் மணிக்கு 90,056 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குறித்த கோளானது மே ஆறு அன்று 14:49 UTC மணிக்கு 6.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அது கடந்து செல்லும்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சிறுகோள்களின் அளவுகள் மற்றும் வேகம் அச்சுறுத்தலாகத் தோன்றினாலும் அவற்றின் நெருங்கிய அணுகுமுறைகள் இன்னும் பூமியிலிருந்து ஒப்பீட்டளவில் தொலைவில் உள்ளன.

அவைகளில் ஒன்று 4,75,443 கிலோமீட்டர் தொலைவில் வரும் என்று சொல்லப்பட்டிருப்பதுடன் இது சந்திரனுக்கான தூரத்தை விட அதிகம் என நாசா எச்சரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.