;
Athirady Tamil News

கனடாவிற்கு புலம்பெயர உள்ளவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

0

கனடாவில் (Canada) வாழ்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகளை அழைத்து வருவதற்கான சிறப்பு வீசா நடைமுறையை கனடா அறிமுகம் செய்துள்ளது.

இதன்மூலமாக கனடாவுக்கு வரும் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி 5 ஆண்டுகள் வரை அந்நாட்டில் தங்கியிருக்க அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வீசா நடைமுறை மே மாதம் 21ஆம் திகதி முதல் நடைமுறையில் இருக்கும் என கனடா அறிவித்துள்ளது.

புதிய வீசா நடைமுறை
2020 ஆம் ஆண்டில் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவருவதற்காக விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்த 35,700பேருக்கு, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, அழைப்பிதழ்களை அனுப்புவதை நீட்டிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி கடந்த 2020ஆம் ஆண்டு விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்தவர்கள், தங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தற்போது வரை பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவருவதற்காக விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால், புதிய வீசா நடைமுறையை பயன்படுத்தி உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை கனடாவுக்கு அழைத்துவர ஒரு வாய்ப்பு உள்ளது என கனடா அறிவித்துள்ளது.

இதன்படி, கனடாவுக்கு வரும் உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை ஒரு நேரத்தில் 5 ஆண்டுகள் வரை கனடாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், உங்கள் இருப்பை கனடாவில் இருக்கும்போது நீட்டிக்கவும் முடியும் என கூறப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீடு
குறித்த விசாவிற்குத் தகுதிபெற, அவர்களுக்கு விண்ணப்பம் செய்பவர் ஒரு கனேடிய குடிமகனாக, அல்லது, நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றவராக அல்லது பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோராக இருக்கவேண்டியது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட அளவிலான பணம் தங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் விண்ணப்பிக்கப்பட்ட பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி முறையான, செல்லுபடியாகும் மருத்துவக் காப்பீடு பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.