கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த இளைஞன் கைது
சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை இலங்கைக்கு (srilanka) எடுத்து வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு (colombo) பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான இளைஞன் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது நடவடிக்கை குறித்து மேலும் தெரியவருகையில்,
சூட்சுமமான முறை கடத்தல்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் (Bandaranaike International Airport) காவல்துறை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் குறித்த நபர் சோதனையிடப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்து சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
துபாயில் இருந்து அவர் குறித்த சிகரெட்டுக்களை சூட்சுமமான முறையில் மறைத்து இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார்.
அதனையடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.