இங்கிலாந்தில் வீடொன்றின் முன் குவிந்த வெடிகுண்டு நிபுணர்கள்: 130 வீடுகளில் வாழ்வோர் வெளியேற்றம்
இங்கிலாந்தில், நேற்று காலை வீடொன்றின் முன் வெடிகுண்டு நிபுணர்கள் குவிக்கப்பட்டதுடன், 130 வீடுகளில் வாழ்வோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வீடொன்றின் முன் குவிந்த வெடிகுண்டு நிபுணர்கள்
இங்கிலாந்திலுள்ள Grimethorpe என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடொன்றின் முன், நேற்று காலை 7.00 மணியளவில் பொலிசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் குவிந்தார்கள். 130 வீடுகளில் வாழும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
குறிப்பிட்ட வீட்டிலிருந்து சந்தேகத்துக்கிடமான பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 57 வயது பெண் ஒருவரும், பின்னர் 58 வயது ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பொலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.