மருத்துவமனையில் பற்களை திருடி.. கோடிக்கணக்கில் சம்பாதித்த மருத்துவர்
10 ஆண்டுகளாக மருத்துவமனையில் பற்களை திருடி விற்று வந்த மருத்துவர் கோடீஸ்வரர் ஆகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடீஸ்வரரான மருத்துவர்
மருத்துவமனைகளில் உடல் உறுப்புகளை திருடி விற்பனை செய்து வருவது பரவி வரும் நிலையில் தற்போது பற்களை திருடும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.
ஜப்பானில் மருத்துவர் ஒருவர் பற்களை திருடி விற்று பொலிஸில் சிக்கிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
ஜப்பானில் உள்ள கியூஷு மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர், அங்குள்ள மருத்துவமனையில் உள்ள வெள்ளி பற்களை திருடி விற்று வந்துள்ளார்.
இந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதால் அணைத்து அறைகளுக்கும் செல்ல முடிந்தது. இவர், நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்டு அறையினுள் மறு சுழற்சிக்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த செயற்கை பற்களை திருடி விற்று வந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக பற்களை திருடி விற்று ஒன்றைரை கோடிக்கும் மேல் சம்பாதித்துள்ளார். இந்நிலையில், பற்கள் காணாமல் போவதை அறிந்த நிர்வாகம் ஆய்வு செய்த போது மருத்துவரின் திருட்டு தெரியவந்துள்ளது.
பின்னர் மருத்துவமனை கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸாரால் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.