அமெரிக்க பாடசாலைகளிலும் யூதவெறி தாக்குதல்கள்
காஸா போரைத் தொடர்ந்து அமெரிக்க பல்கலைக்கழகங்களில் யூத மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்ததைப் போல், பாடசாலைகளிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருவதாக கூறப்படுகின்றது.
அது தொடர்பாக விசாரிக்க அரசு அமைத்த செனட் கமிட்டி முன் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பெர்க்லீ நகர பாடசலைகளின் தலைமை கண்காணிப்பாளர் எனிகியா ஃபோர்டு-க்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு ஆதரவாக பேரணி சென்ற ஆசிரியர்கள், பாலஸ்தீனத்தின் உண்மை வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்க முயலும்போது பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடுவதாக தெரிவித்தனர்.