யாழ்.கந்தர்மடம் – மணல்தறை ஒழுங்கையில் வீடொன்று முற்றுகை, 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது…!
யாழ்ப்பாணம் – கந்தர்மடம் மணல்தறை வீதிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வீடொன்றை, பொலிஸார் முற்றுகையிட்டு நால்வரை கைது செய்துள்ளனர்
வீட்டு உரிமையாளர்,இரண்டு பெண்கள் மற்றொரு ஆண் என நால்வர் கைது செய்யப்பட்டனர்.
சில நாட்களாக குறித்த வீட்டில் அதிகளவு பெண்கள் மற்றும் ஆண்கள் வந்து போவதாக யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு அந்தப் பகுதி ஊர்மக்களினால் தகவல் வழங்கபட்டுள்ளது.
இதன்போது இன்றையதினம் வீட்டை முற்றுகையிட்ட வேளை இரு பெண்களும் ஆண் ஒருவரும் மற்றும் வீட்டின் உரிமையாளரும் கைது செய்தனர்.
இதேவேளை மற்றொருவர் பொலிஸார் வருவதை கண்டு மதில் பாய்ந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச் சென்றவருடையதாக கருதப்படும் கைத்தொலைபேசியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.