;
Athirady Tamil News

பிரித்தானியாவில் வேகமாக பரவும் 100 நாள் இருமல்: 5 சிறுவர்கள் உயிரிழப்பு

0

பிரித்தானியாவில் பரவி வரும்100 நாள் இருமல் தொற்று காரணமாக ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த உயிரிழப்புக்கள் ஜனவரி முதல் மார்ச் இறுதி வரையான மூன்று மாதங்களில் பதிவானவையாகும்.

பிரித்தானியாவில் இவ்வாண்டு 2,700-க்கும் மேற்பட்ட கக்குவான் இருமல் கிருமி வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழக்குகள் பதிவு

அதன்படி, மார்ச் மாத இறுதி வரை 2,793 வழக்குகள் பதிவாகியுள்ளதாக பிரித்தானியா சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

இது கடந்த ஆண்டு பதிவான எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும் என குறிப்பிடப்படுகின்றது.

பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

கக்குவான் இருமல் கிருமி தொற்றானது, அனைத்து வயதினரையும் பாதிக்கும். எனினும், சிறு குழந்தைகளுக்கு இதன் தாக்கம் அதிகம் என சுகாதார பாதுகாப்பு நிறுவன ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்காலிக தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் மட்டும் 1,319 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், ஜனவரியில் 556 தொற்றாளர்களும், பெப்ரவரியில் 918 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.