ஹமாஸுக்கு எதிராக தனியே களமிறங்கிய இஸ்ரேல்: நெதன்யாகு அதிரடி!
ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று போரிட தயாரென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளாா்.
ஆயுத விநியோகத்தை நிறுத்துவதாக அமெரிக்கா (America) எச்சரித்துள்ள நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தென் காஸாவில் அமைந்துள்ள ரபா (Rafa) நகரில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால் இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் வழங்குவதை நிறுத்துவோமென அமெரிக்க அதிபா் ஜோ பைடன் (Joe Biden) நேற்று முன் தினம் (9) எச்சரித்திருந்தார்.
சண்டையிட வேண்டிய சூழல்
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கையில், “ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று சண்டையிட வேண்டிய சூழல் உருவானால் தனித்து நிற்கவும் தயாா். அத்தோடு விரல் நகங்களால் கூட நாங்கள் சண்டை போடுவோம்.
ஆனால் விரல் நகங்களை விட பலமான ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன” என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ரபா மீதான தாக்குதலுக்குப் போதுமான ஆயுதங்கள் தங்கள் வசமிருப்பதாக இஸ்ரேல் இராணுவச் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.