;
Athirady Tamil News

பிரித்தானிய இளவரசரின் ஆபத்தான பயணம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

பிரித்தானிய இளவரசர் ஹரி (Henry Charles Albert David) மற்றும் மேகன் மார்க்கல் (Meghan) நைஜீரியாவுக்கு (Nigeria) விஜயம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இந்த விஜயமானது பிரித்தானிய தரப்பில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

அத்தியாவசிய பயணம் தவிர மற்ற அனைத்தையும் ஹரி மற்றும் மேகன் தவிர்க்க வேண்டும் என பிரித்தானிய அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளம்
உலகின் 12 ஆவது ஆபத்தான நாடக நைஜீரியா சர்வதேச தரப்பில் பட்டியலிடப்பட்டுள்ளதுடன் 100,000 பேரில் 34 பேர் கொலை விகிதம் மற்றும் கடத்தல்களுக்கு வாய்ப்புள்ள நாடாக நைஜீரியா காணப்படுகிறது.

இந்நிலையில், ஹரியின் இந்த பயணம் பிரித்தானியாவில் பாதுகாப்பு தொடர்பில் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

நைஜீரிய தலைநகர் அபுஜா ஒப்பிட்டளவில் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும் பயணத் திட்டத்தில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கடுனாவில் இராணுவத் தளம் சிவப்பு மண்டலமாக பார்க்கப்படுவதுடன் சர்வதேச ரீதியில் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.