யூட்டா மலைகளில் அதிர்ச்சி! பனிச்சரிவில் சிக்கி இளம் ஸ்கையர்கள் பலி
யூட்டா மலைகளில் பனிச்சரிவில் சிக்கி இரண்டு ஸ்கை டைவர்கள் உயிரிழந்துள்ளனர்.
யூட்டாவின் வாசாட்ச் மலைத்தொடரில்(Utah’s Wasatch Range) வியாழக்கிழமை காலை நேரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு ஸ்கையர்கள் உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
சால்ட் லேக் கவுண்டி ஷெரிஃப் ரோஸி ரிவேரா அவர்களின் தகவலின்படி, கடும் பனிப்புயல் மிகுந்த பனிப்பொழிவு ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இடம்பெற்ற இந்த விபத்தில் சிக்கி 23 மற்றும் 32 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு ஸ்கையர் அதிர்ஷ்டவசமாக பனியிலிருந்து மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இறந்த ஸ்கையர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஷெரிஃப் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், ஐக்கிய மாகாணங்களில் இந்த குளிர்காலத்தில் பனிச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்தது 15 ஆக உயர்ந்துள்ளது.
ஆண்டுதோறும் பனிச்சரிவால் சராசரியாக 30 பேர் உயிரிழக்கும் நிலையில், இந்த எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.