;
Athirady Tamil News

புதையலுக்காக 12 ஆம் நூற்றாண்டு கோட்டையை இடித்து தரைமட்டமாக்கிய கிராமத்தினர்… அடுத்து காத்திருந்த அதிர்ச்சி!

0

புதையல் இருப்பதாக கிடைத்த தகவலை நம்பி, 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டையை கிராம மக்கள் இடித்து தள்ளினர். இறுதியில் அவர்களுக்கு ஆச்சரியமான விஷயம் நடந்துள்ளது.

இந்தியாவின் வரலாறு மிகவும் பொன்னானது. இங்குள்ள மன்னர்கள் மற்றும் பேரரசர்களிடம் நிறைய பணம், பொன், நிலங்கள் இருந்தன. ஆங்கிலேயர்கள் இந்த பணத்தையும், நகையையும் கொள்ளையடித்தனர். ஆங்கிலேயர்களிடமிருந்து காப்பாற்ற, பலர் தங்கள் பணத்தை நிலத்தடியில் புதைத்தனர். இதையடுத்து, பணத்தை எடுக்க முடியாத நிலை உருவானது, இத்துடன் அது புதையலாக உருவெடுத்தது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், அகழ்வாராய்ச்சியின் போது மறைந்திருக்கும் செல்வம் பற்றிய செய்திகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. அந்த வகையில் புதையல் இருப்பதாக எண்ணி ராஜஸ்தானை சேர்ந்த கிராம மக்கள் புராதன கோட்டை ஒன்றை இரவோடு இரவாக இடித்து தள்ளியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பூன்டி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு 12 ஆம் நூற்றாண்டின்போது கட்டப்பட்ட கோட்டைகள் அமைந்துள்ளன. இந்நிலையில் கோட்டைக்கு அடியில் புதையல் இருப்பதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து புதையலை எடுக்கும் பேராசையில் இரவோடு இரவாக இந்த கோட்டையை கிராம மக்கள் இடித்து தரை மட்டம் ஆக்கி விட்டனர்.

இருப்பினும் புதையலுக்கு பதிலாக அவர்களுக்கு இடிந்த கற்குவியல்தான் பரிசாக கிடைத்தன. இந்த கோட்டைக்கு செல்வதற்கான சாலை மிகவும் அணுக முடியாதது. இங்கு ஆடு மேய்ப்பவர்கள் மட்டுமே செல்வார்கள். இந்த கோட்டை ஆரவல்லி மற்றும் விந்திய மலைகளுக்கு இடையே கற்களால் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

ஆனால் புதையல் பற்றிய வதந்திக்குப் பிறகு பல கிராம மக்கள் இங்கு வந்தனர். பழங்காலத்தில் இந்தக் கோட்டை நான்கு ராணுவ நிலைகளால் பாதுகாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கோட்டை அமைந்த பகுதியில் புலிகள் காப்பகம் கட்டப்பட்டபோது, ​​சுற்றுலா தலமாக மாறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இந்த சம்பவம் நடந்த பின்னர், அந்த நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.