காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலமைகள் தொடர்பில் ஆராய்வு..
யாழ்ப்பாணம் இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தில், கடந்த திங்கட்கிழமை இரவு திடீரென சேகரித்து வைக்கப்பட்டு இருந்த கழிவுகள் தீ பிடித்து எரிந்துள்ள நிலையில் திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் அதனால் , அப்பகுதி மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து இன்றைய தினம்(11) நேரடியாக கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளின் பிரசன்னத்துடன் நிலமைகளை ஆராய்ந்துள்ள நிலையில் அடுத்து வரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேற்படி விடயம் எடுக்கப்பட்டு நியாயமான தீர்வு காண்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.