அதிகரித்த வெப்பத்தால் மரமுந்திரிகை செய்கை பாதிப்பு :உற்பத்தியாளர்கள் கவலை
தற்போது நிலவும் அதிகளவு வெப்பம் காரணமாக மரமுந்திரிகை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு(Mullaitivu) – முள்ளியவளை மரமுந்திரிகை உற்பத்தியாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவிக்கையில், “கடந்த காலங்களை விட இந்த ஆண்டு எமது முந்திரிகை செய்கையில் குறைவான விளைச்சலே கிடைத்துள்ளது.
முந்திரி பருப்பின் விலை
தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக திருப்திகரமான விளைச்சலை பெறுவதற்கு முடியவில்லை.
இந்நிலையில்,தற்போது முந்திரிப் பருப்பின் விலையும் குறைவாகவே காணப்படுகின்றது. 700 ரூபாவிற்கு விற்பனை செய்யக்கூடிய ஒரு கிலோ முந்திரி பருப்பின் விலை தற்போது 500 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகின்றது.
உற்பத்தியாளர்கள் பாதிப்பு
வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் கொள்வனவாளர்களே அதிக விலைக்கு இந்த பருப்பினை கொள்வனவு செய்வார்கள். அவர்கள் முந்திரிப் பருப்பினை கொள்வனவு செய்வதற்கு ஆனி மாதம் தான் வருகை தருவார்கள்.
அரசாங்கத்தால் தமக்கான உதவிகள் எவையும் வழங்கப்படுவதில்லை” என மரமுந்திரிகை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.