ரணில் பக்கம் சாய்கிறது விமலின் முன்னணி
தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறி லங்கா பொதுஜன பெரமுன(Sri Lanka Podujana Peramuna)வின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe)விற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ (Nimal Piyatissa) தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, உத்தர லங்கா கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிபருக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரணில் உறுதியான அறிவிப்பை வெளியிட்டவுடன்
தேசிய பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அதிபர் ரணில் உறுதியான அறிவிப்பை வெளியிட்டவுடன் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.