சீனாவின் புதிய பிரமாண்ட போர்க்கப்பல்…கடும் நெருக்கடியில் இந்திய கடற்படை!
சீனா (China) அண்மையில் தயாரித்து அறிமுகம் செய்த பிரமாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலால் இந்தியா கடும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபியூஜியன் (Fujian) எனப் பெயரிடப்பட்டுள்ள 80 ஆயிரம் தொன் எடையுள்ள இந்த பிரமாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலை சீனாவே உள்நாட்டில் தயாரித்து அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.
இது விரைவில் சீன கடற்படையில் இணைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதி நவீன தொழில்நுட்பத்தில் இந்த கப்பலை சீனா தயாரித்துள்ளதால், சீன கடற்படைக்கு இந்தக் கப்பலின் வரவு முக்கிய மைல்கல்லாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
விமானம் தாங்கி போர்க்கப்பல்
ஃபியூஜியன் கப்பல் சீன கடற்படையில் இணைந்தபின், இந்திய-பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் பலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் இதுபோல பல விமானம் தாங்கி போர்க்கப்பல்களை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.
தற்போது 3 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை சீனா வைத்துள்ள நிலையில் அதன் பலம் மேலும் அதிகரித்து வருவது இந்திய (India) கடற்படைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய கடற்படையில் தற்போது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா (INS Vickramathithya) மற்றும் ஐஎன்ஸ் விக்ராந்த் (INS Vickranth) ஆகிய இரு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மட்டுமே உள்ளன.
இதனால் இந்திய கடற்படைக்கும் மிக பிரமாண்டமான விமானம் தாங்கி போர்க்கப்பல் தேவை.சீனாவின் ஃபியூஜியன் போன்ற கப்பலை தயாரிக்க 56,000 கோடி ரூபா செலவாகும்.அதில் உள்ள போர் விமானங்களை வாங்க 66,000 கோடி ரூபா செலவாகும்.
கடும் நெருக்கடி
ஆனால் தற்போதைக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் போன்ற சிறிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களை தயாரிப்பதற்கு ஒப்புதல் அளிப்பதற்கு மாத்திரமே மத்திய அரசு பரிசீலனை நடத்தி வருகிறது.
அமெரிக்கா (America), சீனா, இத்தாலி (Italy), இங்கிலாந்து (England), இந்தியா, ஜப்பான்(Japan), பிரான்ஸ் (France), ஸ்பெயின் (Spain) மற்றும் ரஷ்ய (Russia) கடற்படைகளில் மட்டுமே தற்போது விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. அதிலும் அமெரிக்காவிடம் மட்டுமே 11 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன.
மற்ற நாடுகளிடம் ஒரு சில விமானம் தாங்கி கப்பல்கள் மட்டுமே உள்ளன,இதற்கிடையே, சீன கடற்படை புதிய விமானம் தாங்கி கப்பல்களை உருவாக்கி வலுப்பெறுகின்றமை இந்தியாவிற்கு கடும் நெருக்கடியை உண்டாக்கும் என கூறப்படுகிறது.