;
Athirady Tamil News

காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்; 1 லட்சம் பேர் வெளியேற்றம்

0

காசா ரபா நகரில் இஸ்ரேல் ராணுவம் சரமாரி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி உள்ளனர்.

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

7 மாதங்களாக தொடரும் போர்
மேலும் பணய கைதிகளாக 240 பேரை கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 7 மாதங்களை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எனவே போரை நிறுத்த கோரி ஐ.நா. மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.

அதேபோல் வெளிநாடுகளில் உள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது.

எனினும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு அதனை நிராகரித்த நிலையில் போர் உக்கிரம் அடைத்து வருகின்றமை உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.