அதிரடியாக கலைக்கப்பட்ட குவைத் நாடாளுமன்றம்!
குவைத்தின் (Kuwait) எமிர் ஷேக் அல்-சபாவால் (Sheikh al-Sabah), அந்த நாட்டு நாடாளுமன்றம் நேற்று (11) அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குவைத்தின் அரசியலமைப்பில் உள்ள சில பகுதிகளை நான்கு ஆண்டுகளுக்கு இடைநிறுத்துவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் தீவிர இஸ்லாமியவாதத்தின் செல்வாக்கு காரணமாக ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குவைத்தின் எமிர் ஷேக் அல்-சபாவா வெளியிட்டுள்ள காணாளியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆரோக்கியமற்ற சூழல்
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “அரசை அழிக்க ஜனநாயகத்தை பயன்படுத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன்.
முந்தைய ஆண்டுகளில் குவைத் அனுபவித்த ஆரோக்கியமற்ற சூழல், பெரும்பாலான அரசு வசதிகளை அடைய ஊழல் பரவுவதை ஊக்குவித்தது.
துரதிர்ஷ்டவசமாக அது பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிறுவனங்களை அடைந்தது. இது நீதி அமைப்பைக் கூட பாதித்துள்ளது.
இது மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் சரணாலயமாகும். எந்த உரிமையும் இன்றி மக்கள் பணத்தை ஊழல் செய்தவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் தக்க தண்டனை வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.