இளவரசி கேட் எப்படி இருக்கிறார்? இளவரசர் வில்லியம் தெரிவித்த தகவல்
இளவரசர் வில்லியம், மருத்துவமனை ஒன்றின் புதிய கட்டிட கட்டுமானப்பணி துவக்க விழாக்கு நேற்று சென்றிருந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகிகள் கேட்டின் உடல் நலம் குறித்து அவரிடம் விசாரித்துள்ளார்கள்.
இளவரசி கேட் எப்படி இருக்கிறார்?
நேற்று இளவரசர் வில்லியம் Isles of Scilly என்னும் தீவிலுள்ள St Mary’s Community Hospital என்னும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.
அப்போது அவரிடம் அந்த மருத்துவமனையின் நிர்வாகிகள் கேட்டின் உடல் நலம் குறித்து விசாரித்தார்கள்.
அப்போது இளவரசர் வில்லியம், இளவரசி கேட்டின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார். நலம் விசாரித்தவர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்துக்கொண்டார். பொதுவாக வில்லியம் கேட்டின் உடல்நிலை குறித்து வெளிப்படையாக எதுவும் பேசுவதில்லை என்னும் நிலையில், நேற்று அபூர்வமாக அவர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இளவரசி கேட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவது அனைவரும் அறிந்ததே.