என்னை கைது செய்த பின் ஆம் ஆத்மியில் ஒற்றுமை அதிகரித்துள்ளது -கேஜரிவால்
சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் இன்று (மே .12) ஆலோசனை நடத்தினார்.
மின்சார விநியோகம், குடிநீர் விநியோகம், மருந்துகள் விநியோகம் ஆகியவை மக்களுக்கு சென்று சேருவது தடைபட்டு விடக் கூடாதென சிறையிலிருந்தபடி தான் வருந்தியதாகவும், ஆனால் எம்.எல்.ஏ.க்கள் அந்த பணிகளை சிறப்பாகச் செயலாற்றியிருப்பதகவும் பாராட்டியுள்ளார் கேஜரிவால்.
என்னை கைது செய்து, கட்சியை பிளவுபடுத்தி அரசை கவிழ்க்க பாஜக விரும்பியது. ஆனால் அதற்கு மாறாக நடந்துள்ளது. நான் கைதான பின் ஆம் ஆத்மியில் ஒற்றுமை அதிகரித்துள்ளது என பேசியுள்ளார் கேஜரிவால்.