தென்னிலங்கை கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கைது
பண மோசடியில் ஈடுபட்ட தென்னிலங்கை அரசியல் கட்சியொன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழில் கைது செய்யப்பட்டுளளார்.
இந்த சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, அவரிடமிருந்து 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் யாழ். மாவட்ட பெருநிதி குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையிலேயே மோசடி செய்த நபர் கைதாகியுள்ளார். சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.