சட்டவிரோத மதுபானம் காய்ச்சிய மூவர் கைது
கைது வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் உற்பத்தி செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று சந்தேகநபர்களும் நேற்றிரவு (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகந்தை இராணுவ புலானாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கதிரவெளி விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கள்ளச் சாராயம் உற்பத்தி செய்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து, 300 லீட்டர் கசிப்பு, கள்ளச்சாராயம் உற்பத்தி செய்ய பயன்படுத்திய ஒன்பது பரல்கள், செப்புக் கம்பிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மூவருக்கும் எதிராக சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.